இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்
இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்.
ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் அரியலூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இனைந்து வாகை ஆண்டு துணை ஆளுநர் செந்தில்வேல் தலைமையில், மீனாட்சி இராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் அரியலூர் ரோட்டரி சங்கம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனையின் முடிவில் 114 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு சங்கரா கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் சுராஜனா, தேவிகா, மேலாளர் விக்னேஷ் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் அன்பு பில்டர்ஸ் உரிமையாளரும், பொறியாளருமான அன்புராஜ், விஜயகுமார், கிருபாநிதி, ஜெயராமன் மற்றும் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டராக்ட் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் திட்டத்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.