ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு

ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு

சேவை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையத்தினை அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையத்தினை அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் வருவாய்த் துறையின் அனைத்து சான்றிதழ்களை கணினி வழியாக எளிதில் பெற்றிட ராணிப்பேட்டை சட்டமன்ற அலுவலக வளாகத்தில் இலவச இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு இலவச இ-சேவை மையத்தினை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து பெண் ஒருவருக்கு இ-சேவை மூலமாக சான்றிதழ் வழங்கினார்.

இந்த இ-சேவை மையம் மூலம் முதல் பட்டதாரி சான்று, கலப்புத் திருமண சான்று, வருமான சான்று, வாரிசு சான்று, இருப்பிடச் சான்று, சிறு குரு விவசாயி சான்று, விதவைச் சான்று, குடும்பம் பெயர் அதற்கான சான்று கோரி விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களை பொதுமக்கள் இம்மையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களுக்கு சேவை கட்டணம் சராசரியாக ரூ.60 செலுத்த வேண்டும்.

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தில் பொதுமக்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல் இலவசமாக விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சேவைக் கட்டணம் முழுவதையும் தானே ஏற்றுக் கொள்கின்றேன் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து வாலாஜாவை சேர்ந்த ரேகா என்பவரின் பிள்ளைகள் கல்வி உதவிக்காக ரூ.54ஆயிரத்து 330 ரூபாய்க்கான டீடியையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்..

Tags

Next Story