5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

இலவச வைஃபை சேவை! 

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 - 25 க்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

500க்கும் அதிகமாக பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவரை பணிக்கு அமர்த்த வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.

ஐந்து மாவட்டங்களுக்கு இலவச வைஃபை திட்டம்.

அரசு பள்ளிகளில் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் புதிய வகுப்பறைகள்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக ரூ.12000 கோடி நிதி ஒதுக்கீடு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்க திட்டம்.

Tags

Next Story