சுதந்திரப் போராட்ட வீரர்களை ஜாதிய தலைவர்கள் போல் சித்தரிப்பது தொடர்கிறது - ஆளுநர் ஆர்.என் ரவி

பல உண்மையான சுதந்திர போராட்ட வரலாறுகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதை நாம் வெளிக்கொண்டு வர வேண்டும்.சுதந்திர போராட்ட தலைவர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள் என அளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் என்று சொல்லப்படும் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் எழுதிய 89 ஆய்வு நூல்களை ஆளுநர் வெளியிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் நேரில் அழைத்துவரப்பட்டு ஆளுநர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, விழா மேடையில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, இந்நாளில் மருது சகோதரர்கள் பற்றி நினைவு கூறுவது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக உள்ளது. 1801 ஆம் ஆண்டு ஜம்பு தீவு பிரகடனம் மூலம் ஐரோப்பியர்களை எப்படி விரட்ட வேண்டும் என மருது சகோதரர்கள் தெரிந்து வைத்து இருந்தனர்.

ஜம்பு தீவு பிரகடனம் மூலம் சாதி,மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஐரோப்பியர்களை வெளியேற்ற மருது சகோதரர்கள் முடிவு செய்தார் அது தான் முதல் சுதந்திர போராட்டம். அதேபோல் நேதாஜி உலகம் முழுவதும் பல இடங்களில் சிங்கப்பூர்,மலேசியா என பல நாடுகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார் அதற்காக 5000 வீரர்கள் இந்த மண்ணில் இருந்து தன் உயிரையும் இழந்தனர். அப்படி சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகம் தான் நாம் இன்று மகிழ்ச்சியாக உள்ளோம்.

பல உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கபட்டு உள்ளது. அதை நாம் வெளிக்கொண்டு வர வேண்டும். ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை தூக்கிட்டு கொலை செய்த பின்னர் அவர் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி நகரை முழுவதுமாக தரை மட்டம் ஆக்கினார் மேலும் அங்கு மண்ணில் வளத்தை கெடுக்க உப்பினை தூவி கொடுமை செய்தனர். பல்கலைகழக துணை வேந்தர்களுக்கு முதலில் அறியப்படாத 100 சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆராய வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், அவர்கள் பெரிதளவில் தங்கள் பங்கை அளித்துள்ளார்கள். அதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் முன் வந்து மிக சிறப்பாக பணியை, சேவையை செய்துள்ளார்கள். இந்த எண்ணம் தொடர வேண்டும், நம் தலைமுறையினரை கண்டறிகிறோம் , அவர்கள் வெளி ஆட்கள் இல்லை.

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் தான் நாம் இப்போது நன்கு சந்தோசமாக வாழ்கிறோம். ஜம்பு தீவு பிரகடனத்தை வெளியிட்ட இன்றைய தினத்தில் இந்த ஆவண படங்கள் வெளியிடு என்பது மிக முக்கியமான சிறப்பான விசியமாக அமைந்துள்ளது, இதை விட சிறப்பான நாள் அமையாது. எண்ணிக்கையற்ற அளவிலான மக்கள் அவர்கள் வாழ்வை சுதந்திரம் பெற்று தருவதற்காக இழந்துள்ளார்கள். தேசிய கல்லூரிக்கு கடந்தாண்டு மருது சகோதரர்கள் தினத்தில் சென்ற பொழுது மாணவர்கள் மலர் மரியாதை செய்தனர். சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவிடங்களில் வெறும் பூக்கள் வைப்பதால் ஒன்றும் இல்லை. சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாதி தலைவர்காளகவே சித்தரிக்கப்படுகிறார்கள் என்றார்.

Tags

Next Story