மார்ச் 1முதல் 3 ஆம் தேதி வரை போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மார்ச் 1முதல் 3 ஆம் தேதி வரை போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்து இயக்கம்

சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர். அறிவிப்பு.

மார்ச் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை உள்ள விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 01/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 365 பேருந்துகளும், 02/03/2024 (சனிக்கிழமை) அன்று 425 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 01/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் மற்றும் 02/03/2024 (சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 01/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 435 சிறப்பு பேருந்துகளும் 02/03/2024 (சனிக்கிழமை) அன்று 495 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 7201 பயணிகள் சனிக்கிழமை 2839 பயணிகள் மற்றும் ஞாயிறு அன்று 6392 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story