ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கஞ்சா கருப்பு வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கஞ்சா கருப்பு வாக்கு சேகரிப்பு
நடிகர் கஞ்சா கருப்பு வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு தீவிர வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோடு பகுதியில் தமிழ் திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு அதிமுக எம்.பி வேட்பாளருக்கு தீவிர வாக்குகள் சேகரித்தார். காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் தோப்பூர் முருகன் மற்றும் ராமமூர்த்தி ராஜ் ஆகியோர் தலைமையில்,

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். காரியாபட்டி முக்குரோடு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது,

நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில் , விடியா திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 தருவதாக சொன்னார், ஆனால் இதுவரை தரவில்லை. அவர் பணக்காரங்களுக்கு மட்டும் தான் தருவார். ஆனால், எந்த திட்டமாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா ஏழையோ, பணக்காரரோ அனைவருக்கும் கொடுத்தார்.

மேலும் தாலிக்கு தங்கம் கொடுத்தது நம்ம புரட்சித்தலைவி அம்மா தான். அது மட்டுமல்ல, 10, 12 வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், திருமணமான பெண்களுக்கு குழந்தை பிறந்தால் தொட்டில், பால் டப்பா முதல் பவுடர் டப்பா வரை தந்தது நம்ம புரட்சித்தலைவி அம்மா என்று பேசினார். மேலும், எடப்பாடியார் என்ன குறைச்சலாக கொடுத்தார், தைப் பொங்கலுக்கு 21 வகையான பொருட்களுடன் 2500ரூ கொடுத்தது நம்ம எடப்பாடி அய்யா தான். ஆனால்,

இந்த விடியா ஆட்சியில சீனியை கொடுத்து பாயாசம் காய்ச்சி குடிக்க சொன்னாங்க என்று விடியா திமுக அரசை சாடினார். மேலும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி சென்ற முறை வெற்றி பெற்ற பின்னர் இதுவரை பொதுமக்களை சந்தித்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நமது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருக்கும் தப்பு செய்ய தெரியாது. அதிமுக வில் எல்லாருக்கும் கிள்ளி கொடுக்க தெரியாது, அள்ளி தான் தருவாங்க. ஆகையால் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாள் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கஞ்சா கருப்பு பேசினார். மேலும் இந்த பிரச்சாரத்தின் போது,

காரியாபட்டி நகரச் செயலாளர் விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.சிவசாமி, முன்னாள் அதிமுக ஒன்றிய சேர்மன் பழனி மற்றும் காரியாபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story