ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் வெளியீடு

ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் வெளியீடு

 ஜி கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.வாசன் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் . இன்று ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக ஜி கே வாசன் தெரிவித்தார். மொத்தம் 22 நாட்கள் எனது தேர்தல் சுற்றுப்பயணம், அடுத்த மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் 30 ஆம் தேதி தமாகா தேர்தல் அறிக்கை வெளியீடு செய்யப்பட உள்ளது.

Tags

Next Story