கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் -ஜிகே வாசன்
ஜிகே வாசன் பேட்டி
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தேர்தல் கூட்டணியை பொறுத்த வரை தமிழ் மாநில காங்கிரஸ் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கும் என்றும் , பிப்ரவரி மாதம் இறுதியில் செயற்குழு கூடி மக்ககான் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் கூட்டணி முடிவு அறிவிக்க்கப்படும் என்றார்.
முதல் நாளில் இருந்து இந்திய கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவம் என்றும் அக்கூட்டணி இந்திய மக்களின் நம்பிக்கையை பெறவில்லை என்றார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்பது தான் எனது கருத்து என்றார்.
Next Story