சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை!!
தங்கம்
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது. அதன் தொடர்ச்சியாக விலை உயர்ந்து, அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டி, புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது. அதனைத் தொடர்ந்தும் விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் உச்சத்திலேயே தங்கம் விலை பயணித்தது. கடந்த மாதம் இறுதி வரை உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று குறைய ஆரம்பித்தது. கடந்த 5-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று அதிரடியாக தங்கம் விலை சரிந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்தது. ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.