சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனை!!
Gold
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது தங்கத்தை முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே இந்த விலை உயா்வு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை ஒன்றிய அரசு குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், தற்போது அதற்கு மாறாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ. 7,140க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 57,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என தங்கம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வெள்ளி விலையில் மாற்றமில்லைவெள்ளி விலையிலும் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.