உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!

கோல்டன் டிக்கெட்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை தொடர்களை நடத்திய இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது. மும்பை, ஆமதாபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ நிர்வாகம் வழங்கி வருகின்றது. கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் இலவசமாக விஐபி இருக்கையில் அமர்ந்து காணலாம்.

முதலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story