பனிமயமாதா பேராலயத்தில் சிலுவைப் பாதை பவனி
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை பவனியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை பவனியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய வளாகத்தில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக முள் கிரீடம் தரித்து ரத்தம் சிந்திய படி சிலுவையை சுமந்து 14 தலங்கள் வழியாக செல்வதை நினைவு கூறும் வகையிலான இயேசுபிரான் சொரூபம் ஆலய வளாகத்தில் உள்ள 14 தலங்களில் வழியாக கொண்டு செல்லப்பட்டது.
ஒவ்வொரு தளங்களிலும் பங்குத்தந்தை ரூபஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலுவைப்பாதை பவணியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுபிரானின் பாடுகளை கூறியபடி சென்றனர்.
Next Story