Foxconn நிறுவனத்துடன் Google நிறுவனம் பேச்சுவார்த்தை!
Pixel ஸ்மார்ட்போன்
தமிழ்நாட்டில் Pixel ஸ்மார்ட்போன்களை தயாரிக்க Foxconn நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உலகின் 2-வது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் நுகர்வோர் மத்தியில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க Google திட்டமிட்டுள்ளது.
கூகுள்-ன் துணை நிறுவனமான 'Wing LLC' மூலம் தமிழ்நாட்டில் ட்ரோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன்களை உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனமான Dixon-உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான குழு அமெரிக்கா சென்று Google நிறுவனத்திடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருந்த நிலையில், http://Moneycontrol.com இணையதளம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் எலெக்ட்ரிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்குடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.