விதிமீறல் பட்டாசு ஆலைகள் மீது குண்டர் சட்டம் - துரை வைகோ

விதிமீறல் பட்டாசு ஆலைகள் மீது குண்டர் சட்டம் - துரை வைகோ
 துரைவைகோ பேட்டி
கடந்த 5 மாதத்தில் 11 பட்டாசு ஆலை விபத்திகளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசியில் துரைவைகோ தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ,பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று,அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.பின்னர்,சிவகாசி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் பேட்டி அளித்த துரைவைகோ,விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தடுக்க தொடர்ந்து மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நல்ல சட்டங்களை கொண்டு வந்து, விதிகளை கடுமையாக்கி வருகிறது.அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளை கடைபிடிக்க வேண்டியது ஆலை உரிமையாளர்களின் கடமை. மாவட்ட ஆட்சியர் விபத்து குறித்து ஆராய குழுவை அமைத்துள்ளார்.கடந்த 5 மாதத்தில் நடந்த 11 விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலை மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் குண்டர் சட்டம் பாயம் வேண்டும் என்றார்,பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story