தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆளுநர் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்
மணமக்களை வாழ்த்திய ஜி.கே வாசன்
காஞ்சிபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி கஜேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த தாமாக தலைவர் ஜி. கே.வாசனுக்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமக்களை ஜி.கே. வாசன் வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சி நலனை கொண்டு ஆளுநரும் , அவரை எதிரியாக பார்க்காமல் இணைந்து அரசு செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீட் தேர்வு பிரச்னை தொடர்கதையாக தமிழகத்தில் உள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. கடந்த அரசு 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கியதால் தற்போது மாணவர்கள் சிறப்பான இடங்களை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு நீட் விலக்கு என்ற வாசகத்தை முன்னிறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியலை புகுத்த நினைக்கும் இந்தச் செயலை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தின் வளர்ச்சியா டாஸ்மாக்கின் வளர்ச்சி என்றால் டாஸ்மாக்கின் வளர்ச்சியே அதிகம் உள்ளது.
போதைப் பொருட்களின் நடமாட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. காவல்துறை இவற்றை இரும்பு கரம் கொண்டு ஓடுக்க வேண்டும்..வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தமாகா மேற்கொண்டு வருகிறது. வெற்றிக் கூட்டணியில் கண்டிப்பாக தமாகா இருக்கும் என்பது உறுதி.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தமாகா உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்றார் ஜி.கே. வாசன். இந்த நிகழ்வின்போது தாமாக நிர்வாகிகள் தென்னேரி பாபுநாயுடு , கார்த்திக் , ஜி.கே.கஜேந்திரன், சுகுமார் உள்ளிட்ட ஏராளமான தமாகா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.