ஊட்டி வருகிறார் ஆளுநர் ரவி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நீலகிரி வருகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நீலகிரி வருகிறார்.
இந்த மாதம் 30ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி பாதையில் 6 மணி அளவில் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகிறார். 31ம் தேதி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் செல்கிறார். அங்கு யானைகள் பராமரிப்பு குறித்து பார்வையிடும் அவர், 1ம் தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 2ம் தேதி குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். 3ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து 4ம் தேதி காலை 11 மணியளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். ஆளுநர் பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி வந்து தோடர் பழங்குடி இன மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்து (கிராமம்), தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு 18ம் தேதி சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Next Story