TN Assembly Session: சட்டப்பேரவை உரையை வாசிக்க ஆளுனர் ரவி மறுத்தது ஏன்..?
RN Ravi
TN Assembly Session: TN Assembly Session: சட்டப்பேரவை உரையை வாசிக்கஇந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரான இன்று சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையை தொடங்கி வைத்த ஆளுநர், பேரவை தொடக்கத்தில் தேசியக் கீதம் இசைக்கமால் புறக்கணிப்பதாக சப்பைக்கட்டு காரணத்தை கூறி, தமிழக அரசின் உரையை முழுவதும் படிக்காமல் புறக்கணித்ததுடன், அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக சட்டப்பேரவையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி தமிழக அரசு அளித்த உரையை ஆளுநர் ஆர். என். ரவி ஏன் படிக்காமல் புறக்கணித்தார்என்ற குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழக அரசு சில தகவல்களை குறிப்பிட்டுள்ளது. அதை பார்த்த ஆளுநர் உரையை படிக்க மனமின்றி புறக்கணித்துள்ளார்.
தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உரையில்,
1. "நிதி ஆயோக்கின் 2022 ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது" (குறிப்பு:பாஜகவினர் முன்னிறுத்தும் மோடியின் குஜராத்தைவிட தமிழ்நாடு சிறந்தது என கூறியதை ரவி ஏற்கவில்லை)
2. "ஒன்றிய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு முறையை நிறுத்தியதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு 20 அயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிதி நெருக்கடிக்கு இடையே, சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒன்றிய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை." (குறிப்பு: மோடியின் ஒன்றிய அரசை குறை கூறியதை ரவி ஏற்கவில்லை)
3. "சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களால் தமிழ்நாடு அமைதியான மாநிலமாகக் கருதப்படுகிறது. இது, அண்மையில் நடந்து முடிந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைத் தடுப்பதில் இந்த அரசு சமரசமற்ற அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது." (குறிப்பு: சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாஜகவினர் பரப்பும் அவதூறை புறந்தள்ளும் கருத்துக்களை ரவி ஏற்பவில்லை)
4. "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலான திராவிட மாடல் ஆட்சி முறையைப் பின்பற்றுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. (குறிப்பு: தனது பிடித்தது சனாதனம்; பிடிக்காதது திராவிடம் வார்த்தை என்ற நிலையில் சமூகநீதி, சமத்துவம், திராவிட மாடல் ஆட்சி என இருந்ததால் ரவி ஏற்க்கவில்லை)
5. "பெண்களின் முழுமையான ஆற்றலையும், திறமைகளையும் செம்மையாகப் பயன்படுத்தும்போது மட்டுமே சமூகத்தில் உண்மையான முன்னேற்றம் சாத்தியமாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது" (குறிப்பு: தனக்கு பிடித்த சனாதனம் பெண்களை அடிமையாக வைத்திருக்கவே சொல்கிறது. ஆனால், சமூகத்தில் உண்மையான முன்னேற்றம்
சாத்தியமாக பெண்களின் திறமையை பயன்படுத்துவோம் என கூறியதை ரவி ஏற்கவில்லை )
6. "தந்தை பெரியாரின் இலட்சியங்களைப் பின்பற்றி, அனைத்து குடிமக்களின் கண்ணியத்தையும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் கண்ணியத்தைக் காத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. விளிம்புநிலைச் சமூகங்களை மேம்படுத்துவது அரசின் தார்மீகக் கடமை மட்டும் அல்ல. மாறாக மக்களின் உரிமை." (குறிப்பு: வேதங்களை சொல்லி ஏமாற்றி மக்களை பிளவுபடுத்திய பிராமணர்களை கடுமையாக சாடிய தந்தை பெரியார் இலட்சியங்களைப் பின்பற்றுவதா? என ரவி ஏற்கவில்லை)
7. "சமூகநீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றிற்கு நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும். (குறிப்பு: தமிழ்நாடு திராவிடத்தால் சீரழிந்தது என பாஜகவினர் விமர்சிக்கும் நிலையில் நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் என கூறியதை ரவி ஏற்கவில்லை)
8. "வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நாட்டின் உன்னதமான கொள்கைகள் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும் நாம் துணை நிற்போம். ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது" (குறிப்பு: இஸ்லாமியருக்கு எதிராக பாஜக பயன்படுத்த உள்ள ஆய்தமான சி.ஏ.ஏ சட்டத்தை தமிழ்நாடு நிராகரிப்பதை ரவி ஏற்கவில்லை )
இப்படி ஒட்டுமொத்தமாக பாஜகவினருக்கு பிடிக்காத கருத்துக்களும், பாஜகவின் ஒன்றிய அரசு மீதான விமர்சனங்களும் தமிழ்நாடு பற்றிய புகழுரைகளும் பிராமணியத்தை வேர் அறுத்த திராவிடம் மீதான பாராட்டுகளும், சனாதனத்தை மீறிய சிந்தனைகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்ததால் ஆர்.என்.ரவியின் மனம் ஏற்ற மறுத்து, அரசின் உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.