பொன்முடியை அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு - தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு !
பொன்முடி - ஆர்.என் ரவி
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பொன்முடிக்கு அமைச்சர் பதவியை செய்து வைக்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 12ம் தேதி அவர் குற்றவாளி என்னும் தீர்ப்பை தள்ளி வைத்தது.
இதனை அடுத்து அவருக்கு திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை செய்து வைக்க தமிழக அரசு சார்பாக ஆர் என் ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிந்துரை செய்யப்பட்டார்.
இருப்பினும் இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிரபராதி என தீர்ப்பு வழங்கவில்லை எனவும், அவர் குற்றவாளி எனும் தீர்ப்பை மட்டும் தான் நிறுத்தி வைத்ததாகவும் கூறி ஆளுநர் ரவி அமைச்சர் பதவி பிரமாணத்தை செய்து வைக்க மறுத்துள்ளார்.
இதனை அடுத்து தமிழக அரசு சார்பாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் அதனை மறுத்து புதிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் எனவே திருக்கோவிலூர் எம்எல்ஏ பொன்முடிக்கு அமைச்சர் பதவியை பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடும் படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக மனுவை விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.