ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டியது - முதல்வர் மு.க ஸ்டாலின்

ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டியது - முதல்வர் மு.க ஸ்டாலின்

முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மாநில வளர்ச்சி பிடிக்காமல் சிலர் ஆளுநர் பதவியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று எனவும் பேசியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார். என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை

சில இடையூறுகளால்தான் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்காகவும் அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் இந்த சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேச்சு

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள்:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா

Tags

Next Story