அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு : உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு : உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர்கள்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். மருத்துவர்கள் சங்கம் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கிய போது 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அதனை செயல்படுத்த முடியவில்லை என்று அரசு தரப்பில் பதில்.

Tags

Next Story