கோயில் பூட்டை உடைத்து திருட்டு - வீடியோ

கோயில் பூட்டை உடைத்து திருட்டு - வீடியோ

சிசிடிவி காட்சி

குடியாத்தம் அருகே நள்ளிரவில் கோயிளுக்குள் நுழைந்து பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடியது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் காட்பாடி சாலையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து உண்டியலை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

Tags

Next Story