போதையின் தலைநகரே குஜராத் தான், மறைக்கும் பிரதமர் மோடி - ரஞ்சன் குமார்

போதையின் தலைநகரே குஜராத் தான், மறைக்கும் பிரதமர் மோடி - ரஞ்சன் குமார்

ரஞ்சன் குமார்

போதையின் தலைநகரே குஜராத் தான் என்பதை பிரதமர் மோடி மறைக்கப் பார்க்கிறார். குஜராத்திலிருந்து தான் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன இதற்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும்.உண்மை நிலை இப்படியிருக்க, தமிழ்நாட்டில் ஏதோ போதைப் பொருள் தாராளமாக கிடைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பிரதமர் முயல்கிறார் அவரது கபட நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை, போதைப்பொருளை இந்த தேசத்தை விட்டு ஒழிப்பேன் என்று நெல்லையில் 56 அங்குல மார்பை விரித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் மோடி.போதையின் தலைநகரே குஜராத் தான் என்பதை மறைக்கப் பார்க்கிறார். நாட்டிலேயே அதிகமான போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் என்கிறது கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் வைக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.

இதையாவது அவர் அறிவாரா? இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பாஜக ஆளும் ராஜஸ்தானில் தான் அதிக அளவு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன ராஜஸ்தானை தொடர்ந்து பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், , மணிப்பூர், குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அங்கு போதைப் பொருட்களைத் தடுக்க மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு போய் போதைப் பொருள் ஒழிப்பு பற்றிப் பேச தைரியம் இருக்கிறதா? இந்தியாவின் போதைப் பொருள் கடத்தலின் தலைநகராக குஜராத் மாநிலம் தான் இருக்கிறது கடந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் குஜராத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,300 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து போதைப் பொருட்களை விற்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக குஜராத் இருக்கிறது என்பது தான் உண்மை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகருக்கு அருகில் உள்ள மிதி ரோகர் என்ற கிராமத்தில் ஒரு கிலோ எடையுள்ள 80 பாக்கெட்டுகள் கிடந்தன 2017 ஆம் ஆண்டு குஜராத் மாநில கடற்பகுதியில் ஒரு கப்பலிலிருந்து 1,500 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 550 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டது 2021 ஆம் ஆண்டு குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2017-21 வரை 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.2. லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் 25 மாவட்டங்களிலிருந்து ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன குஜராத் உள்துறை அமைச்சர் ஹார்ஸ் சங்வியின் தொகுதியில் மட்டும் 3 போதை மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டதே இவ்வளவு என்றால் புழக்கத்தில் விடப்பட்டது எவ்வளவு இருக்கும் என்பது மோடிக்கே வெளிச்சம் கஞ்சா, மெத்தாம்பிடமைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் குஜராத்தில் சரளமாக கிடைக்கின்றன. சமீபகாலமாக குஜராத் துறைமுகத்தைப் பயன்படுத்தி சர்வதேச போதை கடத்தல் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து ஐ.நா சபையும் எச்சரித்துள்ளது. குஜராத்திலிருந்து தான் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன இதற்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும்.

உண்மை நிலை இப்படியிருக்க, தமிழ்நாட்டில் ஏதோ போதைப் பொருள் தாராளமாக கிடைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பிரதமர் முயல்கிறார் அவரது கபட நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. கச்சத்தீவை கையில் எடுத்தவர்கள் இப்போது கஞ்சாவை கையில் எடுத்திருக்கிறார்கள் ஹ குஜராத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தாலே போதும், இந்தியா முழுவதும் பரவுவதை தடுத்துவிடலாம் குஜராத்தில் தொடர்ந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.

இது பற்றி பிரதமர் மோடி ஒரு முறை கூட வாயே திறக்கவில்லை நெல்லை கூட்டம்தான் தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலுக்காக நான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் தமிழ்நாட்டில் மட்டுமல்ல..இனி இந்தியாவிலேயே அவர் பிரச்சாரம் செய்யும் கடைசி தேர்தல் இதுதான் மோடியை தூக்கி எறிய நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். ஜுன் 4 ஆம் தேதி இந்தியா இரண்டாவது முறையாக சுதந்திரம் அடையப்போகிறது.

Tags

Next Story