கள்ள சாராய வியாபாரி மீது பாய்ந்த குண்டாஸ்!
பலராமன் (38)
குடியாத்தத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ் செட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் (38). இவர் தொடர்ந்து கள்ள சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பலராமன் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க டிஎஸ்பி ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மேற்பார்வையில், எஸ் பி மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பலராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரப்பட்டுள்ளார். இதையடுத்து பலராமன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story