அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின

23ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்

சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நேற்று முதல் தொடங்கின. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடந்த 7-ந் தேதியும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 11-ந் தேதியும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு பதில் 13-ந் தேதி (நேற்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று அரையாண்டு தேர்வு தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்தேர்வு (தமிழ்) நடந்தது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்று தேர்வை எழுதினர். இன்று (வியாழக்கிழமை) விருப்ப மொழிப்பாடமும், 15-ந் தேதி ஆங்கில தேர்வும் நடக்கிறது. 18-ந் தேதி கணிதம், 20-ந் தேதி அறிவியல், 21-ந் தேதி உடற்கல்வியியல், 22-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் 22-ந் தேதி வரை நடைபெறும் என்றும், 23-ந் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story