மோடி தமிழகத்திற்கு ஒரு புல்லையாவது பிடுங்கி போட்டுள்ளாரா - உதயநிதி ஸ்டாலின்
வாக்கு சேகரிப்பு
campaign
மோடி தமிழகத்திற்கு ஒரு புல்லையாவது பிடுங்கி போட்டுள்ளாரா - உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள ஒத்தக்கடையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் , 100 சதவீதம் சொல்கிறேன் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் , சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார். இந்திய கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம் , 2021 ல் மக்கள் ஆதரவு பெற்று முதல்வர் ஆனவர் ஸ்டாலின்.தவழ்ந்து போய் முதல்வர் ஆகவில்லை என்ற உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தாகவும் , நிதி , கல்வி , மொழி உரிமை என பல உரிமைகளை விட்டு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்றார். 234 சட்டமன்ற உறுப்பினர்களில் அதிமுக உள்பட 230 உறுப்பினர்கள் நீட் தேர்வு வேண்டாம் என ஆதரவு தெரிவித்தாகவும் , இதுவரை மோடி தமிழகத்திற்கு ஒரு புல்லையாவது பிடுங்கி போட்டுள்ளாரா என கேள்வி எழுப்பினர். தேர்தல் வந்த்தால் ஓட்டு விழாது என்பதால் பாஜகவுடன் இன்று கூட்டணியில் இல்லை நாடகம் ஆடுவதாகவும் , தேர்தல் முடிந்த பிறகு பாஜகவுடன் அதிமுக சேர்ந்துவிடும் என்றார்
Next Story