காவல் துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்

காவல் துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்

high court of madras

காவல் துறையினரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட வழக்கினை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்து வருவதால், ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல் துறையினரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. வழக்கின் விசாரணையை 28-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்றார்.

Tags

Next Story