கடைசி முறை என்றார், கடைசி பயணமாக அமைந்துவிட்டது - சைதை துரைசாமி
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமி இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது இல்லத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி,தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் மா சுப்ரமணியம் சேகர்பாபு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமான், வைகோ, திருமாவளவன் ,சசிகலா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவரது உடல் அவரது இல்லத்தில் இருந்து கண்ணம்மாபேட்டை மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைதை துரைசாமி. வெற்றி துரைசாமியை ஹிமாச்சல் பிரதேசத்துக்கு நான் போக வேண்டாம் என கூறினேன், ஆனால் இதுவே கடைசி முறை என்றார்.. ஆனால் இதுவே கடைசி பயணமாக அமைந்துள்ளது. அருமை மகன் வெற்றி நம்மை விட்டு பிரிந்தது. விதி வசம் தான். போக வேண்டும் என்று சொன்னேன். கடைசி பயணம் என்று சொன்னதாகவும், தமிழகம் முழுவதும் 1000 கண்க்கான மாணவர்கள் அரசு உதவி பணிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பை பெற்ற அனைத்து மகன் மகன்களும் வந்துள்ளார்கள்.
ஒரு மகன் போனாலும் எனக்கு பக்க பலமாக மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள். சக மனிதனுக்காக வாழ வேண்டும். 259 சாதிகளில் 170 சாதியினரை அரசு பணியிலும், மீதியுள்ள 89 பிரிவுகளில் அரசு பணியில் அமர வைப்பது தான் எனது மனதில் உறுதி எடுத்து கொண்டதாகவும், அந்த சேவையை செய்வேன். எனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும், உயர் பதவியில் இருக்கின்ற, தமிழ்நாட்டில் அனைவருக்கும்.. நான் மனம் கலங்க மாட்டேன். நான் இத்தனை மகன்களை பெற்றிருக்கிறேன். சேவையை பிரதானப் படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என்று இறுதி நாளில் சூளுரை கொண்டு பயனிக்கிறேன் என்று நன்றியோடு, நீங்கள் அன்பும் அக்கறையும் கொண்டு உங்கள் துக்கத்தை இரங்கலை தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்றார்