மே 3 ஆம் தேதி வெப்பம் அதிகரிக்கும்
மே 3 ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் குளச்சல் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), பெரியாறு (தேனி) தலா 2, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), வத்திராயிருப்பு (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) தலா 1 சென்டி மீட்டர் அளவு மழை பதிவானது.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 42.5° செல்சியஸ், ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3° செல்சியஸ், சேலத்தில் 40.8° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6° செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 6 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். மே 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே 3 ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும். காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். வரும் 3 ஆம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.