ஊட்டியில் கனமழை

ஊட்டியில் 2 மணி நேரம் பெய்த கனமழையால், ரயில்வே காவல் நிலையம் வெள்ள நீரில் மூழ்கியது.

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பெய்து வந்த கோடை மழை சராசரி அளவைவிட 250 மீ.மி., அதிகமாக பதிவானது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை ஒரு சில நாட்களில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கனமழை ஒரு மணி வரை பெய்தது. இதனால் ஊட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் மழை நீரில் சிக்கிய ஒரு சில வாகனங்கள், அங்கிருந்தவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டன. ஊட்டி ரயில்வே காவல் நிலையத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்தால் காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் காவல் நிலையத்திலிருந்து போலீஸார்.

காவல் நிலையத்தை சூழ்ந்துள்ள தண்ணீர் முழுமையாக வடிய ஒரு நாள் ஆகும். மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், காவல் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. பல ஆண்டுகளாக கன மழை பெய்தால் காவல் நிலையத்தை வெள்ளம் சொல்வது வாடிக்கையாக உள்ளது. எனவே காவல் நிலையத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. ஊட்டி நகரில் உள்ள நகராட்சி சந்தை உள்பட பல இடங்களிலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றது.

Tags

Next Story