வங்கக்கடலில் நாளை தீவிர புயல் உருவாகிறது- 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!!

வங்கக்கடலில் நாளை தீவிர புயல் உருவாகிறது- 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!!

வங்கக்கடல்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவவடைந்தது. அது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது. வருகிற 26ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்த்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் நாளை 25ம் தேதி முதல் 28தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 25ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது. குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதனிடையே, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையும் தொடங்கி உள்ளது.

Tags

Next Story