சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகம் செய்வதை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்து அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகம் செய்யும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பான திருத்த விதிகளை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்குக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story