மேல்பாதி திரௌபதி அம்மன் திறந்து பூஜை செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு

மேல்பாதி திரௌபதி அம்மன் திறந்து பூஜை செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறந்து தினசரி பூஜை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோவிலில் தினசரி பூஜைகள் செய்ய அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூஜைகளை செய்ய பூஜாரியை நியமிக்கும்படி அறநிலையதுறைக்கு உத்தரவு அளித்து கோவிலுக்குள் எவரையும் அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. அதேபோல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல்துறைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் கோவில் மூடப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story