மாணவர்கள் கல்வி செலவை அரசு ஏற்கும்.

மாணவர்கள் கல்வி செலவை அரசு ஏற்கும்.

அரசு பள்ளி

உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை தமிழக அரசு ஏற்கும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும். மேலும் அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையை பெற்று சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக செல்லும் முதல் பயணத்தொகை முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டு தோறும் 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story