நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலை ஈசானிய மைதானம் முன்பு அண்ணா நுழைவாயில் எதிரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது . இந்த அறப்போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் அமைச்சர், பொதுப்பணி கட்டிடங்கள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் போட்டனர்.
இந்த போராட்டத்தில் முக்கிய கவன ஈர்ப்பு அதாவது, சாலைப்பணியாளர்களின் 41 மாதம் காலப்பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்கான காலி பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கி வாழ வைக்க வேண்டும் . பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும்.
பணியாளர்கள் பணிக்கு மட்டுமே தகுதி பெற்ற 200க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் குடும்பங்கள் கருணை அடிப்படையில் பணி வழங்க கேட்டு 15 ஆண்டுகளாக மேலாக காத்திருப்போக்கு கோட்ட பொறியாளர்கள் மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் அனைவருக்கும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் ரூபாய் 5,200 முதல் ரூ.20,200 தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப் படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவை படி வழங்க வேண்டும்.
சமூக நீதிக்கு வேட்டு வைத்து இட ஒதுக்கீடு கோட்பாட்டை புறம் தள்ளி முறைகேடாக தமிழக முழுவதும் வெளியிட்டுள்ள முதுகலை பட்டியலை அனைத்து கூட்டத்திலும் ரத்து செய்து செக்சன் 41(1) ஆஃப் டி என் ஜி எஸ் (சி எஸ் ) act 2016 படி முறைப்படுத்தி வெளியிட வேண்டுமென இந்தபோராட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டனர் .