குன்னூரில் இமயமலை ருத்தராட்சை சீசன் துவக்கம்

குன்னுரில் இமயமலையில் மட்டும் காணப்படும் ருத்திராட்சை சீசன் துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மூலிகை மற்றும் பல்வேறு தாவரங்கள் மட்டுமில்லாமல் அரிய வகை பழங்கால மரங்களும் அதிகளவில் உள்ளது. இமயமலை, நேபாளம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரங்கள் இந்த பூங்காவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடவு செய்யப்பட்டது.தற்போதும் இந்த மரங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நவம்பர் மாதம் தொடங்கவேண்டிய ருத்ராட்சை சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதனால் மரங்கள் முழுவதும் ருத்ராட்சை காய்கள் காய்த்துள்ளது. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சை காய்கள் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் இதற்கு கிராக்கி அதிகமாக உள்ளது.ருத்ராட்ச சீசன் தற்போதே தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இரண்டாவது சீசனுக்காகநடவு செய்யப்பட்ட பூக்கள் பூங்காவில் பூத்து குலுங்குகிறது.

Tags

Next Story