இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை

பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜாஜி இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கழகத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் டீக்கடைக்குள் புகுந்து ராஜாஜியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதில் ராஜாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார், இந்த சம்பவத்தையடுத்து டீ கடைக்குள் டீ அருந்தி கொண்டிருந்த பொது மக்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலையாளிகள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வரும் நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்து அமைப்பு தலைவர் ராஜாஜி வெட்டி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஆவடி துனை ஆணையர் அய்மன் ஜமால் விசாரணை மேற்கொண்டார். தேநீர் கடையில் தேநீர் அருந்திய போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். தப்பியோடிய கொலையாளியை பிடிக்க பூந்தமல்லி உதவி ஆணையர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்க உத்தரவு.
