கடையடைப்பில் இந்து வணிகர் சங்கம் பங்கேற்காது

கடையடைப்பில் இந்து வணிகர் சங்கம் பங்கேற்காது

 தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பில் இந்து வணிகர் சங்கம் பங்கேற்காது என சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பில் இந்து வணிகர் சங்கம் பங்கேற்காது என சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பில் இந்து வணிகர் சங்கம் பங்கேற்காது என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாளை தமிழகம் முழுவதும் வணிகர் தினம் கொண்டாட போவதாகவும் அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று வணிகர் சங்கத் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை மதுரையில் வணிகர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடத்திடவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். வணிகர் சங்க கூட்டத்தில் தொழிலதிபர்கள் வணிகர்களை அழைத்து அவர்களின் குறைகளை பேசி அதற்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமே தவிர திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி மாநாட்டை போல் திமுக பிரமுகர்களை வைத்து நடத்துவது எந்த விதத்தில் முறையாகும். சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் திமுக புள்ளிகளாகவே உள்ளனர். பெயருக்கு கூட பிற கட்சியிலிருந்து எவரும் அழைக்கப்படவில்லை. தனது மகன் திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வணிகர்களையும் திமுகவிடம் அடகு வைப்பது போல் விக்கிரம ராஜா செயல்பட்டு வருவதாகவே தெரிகிறது.

மேலும் நமக்கு உண்மையான வணிகர் தினம் என்பது நமது வளங்களை சுரண்டி, வரி சுமத்தி, அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேய வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவிய தினமான அக்டோபர் பதினாறாம் தேதி தான் நமக்கெல்லாம் உண்மையான வணிகர் தினம். அதனால் தான் இந்து வியாபாரிகள் நல சங்கம் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆகையால் நாளை நடைபெற உள்ள கடையடைப்பில் இந்து வியாபாரிகள் சங்கம் பங்கேற்காது. மேலும் அனைத்து இந்து வியாபாரிகளும் தங்களது கடைகளை திறந்து வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story