60 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் (நிலை - 3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Next Story