ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ள நிலையில் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோடை காலம் ஆரம்பித்ததை எடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் பாறைகளாக காணப்பட்டிருந்த நிலையில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் மீண்டும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது நேற்று வரை வினாடிக்கு 3000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story