ஒகேனக்கல் : நீர் வரத்தின்றி பாறைகளாக காட்சி தரும் காவிரி ஆறு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றுலா தலம் ஒகேனக்கல் காவிரி ஆறு, தினந்தோறும் இங்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி காண வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது பருவமழை பொய்த்துப் போனதை எடுத்து ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணைகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் அளவு நாளுக்கு நாள் சரிந்து தற்போது தொடர்ந்து வினாடிக்கு 200 கன அடி விதமே தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து பல்வேறு இடங்களில் பாறைகளாக காட்சியளிக்கின்றன இதனால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சினி ஃபால்ஸ், ஐந்தருவி, மற்றும் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.