ஹோட்டல் தொழிலாளியின் மகள் மாநில அளவில் முதலிடம்
ஹோட்டல் தொழிலாளியின் மகள் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஹோட்டல் தொழிலாளியின் மகள் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அரியலூர், மே.6- அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டியில் ஹோட்டல் நடத்தும் தொழிலாளியின் மகள் அஸ்விதா பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டாக்டர் ஆகி ஏழை மக்களுக்கு சேவை புரிவது எனது வாழ்நாள் லட்சியம் என கூறினார். தமிழக முழுவதும் நடந்து முடிந்த பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் ஹோட்டல் நடத்தி வரும் கொண்டல்ராஜ்- சீத்தம்மாள் தம்பதியினர் மகள் அஸ்விதா. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் பயோ-மேத்தமெட்டிக்ஸ் பாடப் பிரிவில் கல்வி பயின்றார். இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடப் பிரிவில் 99 , ஆங்கிலம் 98, கணக்கு, 100, இயற்பியல் 100, வேதியல் 100, உயிரியல் 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அஸ்விதா அளித்த பேட்டியில், மீன்சுருட்டியில் எனது தந்தை ஹோட்டல் நடத்தி வருகிறார். மிகவும் சிரமப்பட்டு என்னை எனது பெற்றோர்கள் படிக்க வைத்தனர். நானும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து படித்து வந்தேன். நான் டாக்டராக ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதே எனது வாழ்நாள் லட்சியம் என அவர் தெரிவித்தார். சாதனை மாணவிக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தினர் இனிப்பு மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினர்.
Next Story