பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு - முதல்வர் உத்தரவு

பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு - முதல்வர் உத்தரவு

 சின்னப்பிள்ளை அம்மாள் 

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், உடனடியாக வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம், 2000ம் ஆண்டில், 'ஸ்த்ரிசக்தி' புரஸ்கார் விருது பெற்றவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில், எனக்கு வீடு வழங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை' என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், உடனடியாக அவருக்கு புதிதாக வீடு வழங்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு அறிவுறுத்தினார்.அதன்படி சின்னப்பிள்ளைக்கு ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுள்ள, 1 சென்ட் வீட்டு மனையுடன், பில்லுச்சேரி ஊராட்சி திருவிழாப்பட்டி கிராமத்தில், கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், அவருக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி, இந்த மாதமே துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story