தமிழ்நாட்டில் எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

தமிழ்நாட்டில் எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

 மின் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதலே அமலுக்கு வருகிறது.

அதன்படி, 0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags

Next Story