ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம்
கல்வி கடன் வழங்கல்
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாபெரும் கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்ஜி குமார், மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்ரீ வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாபெரும் கல்வி கடன் முகாமில் இந்தியன வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் கல்வி கடன் வழங்குவதற்கு உண்டான விண்ணப்பங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி, மாணவர்களின் உயர்கல்வி படிப்பு விடுபட கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மத்திய, மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் கல்வி கடன் மேல நடத்தப்பட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது எனவும், போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்வருகிறது.
பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அதே போல் மாணவர்கள் படிக்கும் போதே தொழில்கல்வியுடன் தொழில் முனைவோர்களாக ஆவதற்கு மத்திய அரசு பல வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் குறிப்பாக பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம்,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டம் குறித்த பல திட்டங்களில் மூலம் பயன்படுத்தி நீங்களும் தொழில் முனைவராக மாறலாம் என தெரிவித்தார்..