ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - ஜவாஹிருல்லா

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  அனுமதி வழங்கக் கூடாது - ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா 

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதித்தால் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். ஓஎன்ஜிசி நிறுவனம் தற்போது தமிழகத்தில் கடற்கரை பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, அரியலூர், தஞ்சையில் 26 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் மையத்திடம் விண்ணப்பம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு ஏற்கனவே இயற்கை வளங்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்க மாட்டோம் என முன்பே அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஏற்கனவே நீர் வளம் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளும், மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இராமநாதபுரம் மாவட்ட விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு எப்போதும் அனுமதி வழங்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்

Tags

Next Story