குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்ட ஒப்புதல் அளித்தேன்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்ட கடந்த 2013ல் நான் தான் ஒப்புதல் கொடுத்தேன் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- ஒரு நாட்டின் பிரதமர் எந்த அளவிற்கு பொய் சொல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு பொய் சொல்ல வேண்டும்., தமிழ்நாட்டில் ஆளும் திராவிட கூட்டணி ஆட்சி இங்கு குடும்ப அரசியல் நடக்கிறது என வெளிப்படையாக கூறுகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையிலும் தூத்துக்குடியிலும் மிகப்பெரிய அளவிற்கு கனமழை பெய்தது., தூத்துக்குடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது மக்கள் அவதிப்பட்டனர்.
ஆனால் மத்தியில் உள்ள பாரத பிரதமர் இந்த பகுதி மக்களை புறக்கணித்து உள்ளார்., வெள்ள நிதி தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கூறிய போதும் பிரதமர் செவி சாய்க்கவில்லை.. பாரத பிரதமர் ஸ்ரீரங்கம் வந்தார். ராமேஸ்வரம் வந்தார் ஆனால் தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வரவில்லை., என்ன திட்டங்களை செய்தோம் என பட்டியலிட்டு சொல்ல வேண்டும்.என்றார். பிரதமர் பத்தாண்டுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை என்ன நிறைவேற்றினேன் என்று சொல்லவில்லை., விலைவாசி உயர்ந்துள்ளது, வேலையில்லா திண்டாட்டம், மக்கள் கையில் பணம் இல்லை.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தபோது எந்த திட்டங்களை செய்தார்கள் என்று பட்டியலிட்டு சொல்லவில்லை., அவர் பிரதமராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மதுரையில் திட்டம் போடப்பட்டு அதற்கு முடிவெடுக்கப்பட்டது. தற்போது வரை ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் வேலை தூங்கவில்லை. புதுச்சேரியை வளம் மிகுந்த மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்னார் இப்போது சாராயம் காய்ச்சல் தான் நடக்கிறது., மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குலசேகரப் பட்டினம் கட்டுவதற்கு நான் ஒப்புதல் கொடுத்தேன். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார் 2013இல் ராக்கெட் ஏவுதலத்துக்கு கட்டுவதற்கு நான் ஒப்புதல் கொடுத்தேன். ரஷ்யா கொடுக்க மறுத்து விட்டது நான் முதல்வராக இருக்கும்போது கொடுத்தேன்.ராக்கெட் ஏவுதலத்திற்கு 10 வருடம் கழித்து அடிக்கல் நாட்டி விட்டு பெருமையாக பேசுகிறார்.
செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பியது எங்கள் ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டது அதற்கு பெயர் பெறுவது பிரதமர் மோடி. பாரதிய ஜனதா கட்சி வெத்து வேட்டு, மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.. பிரதமர் வரும்போது பக்தர்கள் உள்ளே வரக்கூடாது என சொல்வது அராஜக செயல்.,மக்கள் நடமாட முடியாத அளவிற்கு உள்ளது இவர் என்ன பிரம்மா வா., மக்களை துன்புறுத்தி ஒரு பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்திய கூட்டணி வெற்றி பெறும் பாரதிய ஜனதா கட்சி வீட்டிற்கு அனுப்பப்படும். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர ஒரு கட்சி கூட வரவில்லை. மோடி மக்களை நம்பவில்லை ஓட்டு மிஷினை நம்புகிறார் 400 சீட்டு என்பது சொல்ல முடியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில், ஜெர்மனியில் வாக்குச்சீட்டு. இந்தியாவில் ஏன் பயன்படுத்தக் கூடாது. ரிமோட் மூலம் தில்லு மூடு செல்வதற்காக தான் வாக்கு இயந்திரம் மெஷின் பயன்படுத்துகின்றனர். என கூறினார்.