நான் முதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் கல்லூரி களபயணம்

நான் முதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் கல்லூரி களபயணம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை கல்லூரி களப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆட்சியர் வளர்மதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள கல்லூரிக்கு அழைத்து செல்வது தொடர்பாக கல்லூரி களப்பயணம்-2024 மேற்கொள்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி பேசும்போது: நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 66 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியை தொடரவும், அனைவருக்கும் உயர்கல்வி சாத்தியம் என்ற எண்ணத்தை உருவாக்கி தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரி களப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 2395 மாணவ, மாணவியர்கள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று 4கல்லூரியில் களப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது மாணவர்களுக்கு இளங்கலை படிப்புகள், கல்வி உதவித்தொகை திட்டங்கள், போட்டித்தேர்வுகள் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள், கல்விசாரம் நிகழ்வுகள், கலச்சார கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள், உயர்கல்விக்கு முதன்மையான நிறுவனங்கள் குறித்து வழிகாட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். சோளிங்கர், நெமிலி, பனப்பாக்கம், கலவை, காவேரிப்பாக்கம் பகுதிகளில் இருந்து அருகில் உள்ள மாவட்டத்துக்கு உரிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு பிளஸ் - 2 முடித்த மாணவர்கள் வேலைக்கு செல்வதாக தெரிய வருகிறது. மாணவர்கள் கட்டாயம் ஏதேனும் உயர்கல்வி முடித்தால் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்க வேண்டும். இந்த களப்பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்தார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு கல்லூரி முதல்வர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story