இனிமேல் வாழ்க்கையில் இதை செய்யமாட்டேன் - அண்ணாமலை !

இனிமேல் வாழ்க்கையில் இதை செய்யமாட்டேன் - அண்ணாமலை !

அண்ணாமலை 

இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன், கட்சி அலுவலகத்தில் மட்டும் சந்திப்பு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கோவை வருவதாக வந்த தகவலை அடுத்து செய்தியாளர்கள் கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையின் பேட்டிக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து, ''இனி என் வாழ்வில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். செய்தியாளர் சந்திப்பு எல்லாம் கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும். நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும்.'' எனக் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story