அதிமுகவை ஒன்றிணைப்பேன்- எனக்கு கெப்பாசிட்டி இருக்கு - சசிகலா

அதிமுகவை ஒன்றிணைப்பேன்- எனக்கு கெப்பாசிட்டி இருக்கு - சசிகலா

சசிகலா 

அதிமுகவைஒன்றிணைப்பதே தன்னுடைய இலக்கு என்று சசிகலா கூறி சசிகலாவிடம் செய்தியாளர்கள் அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து உங்கள் யுக்தி என்ன என்று கேள்வி எழுப்பியபோது, நீங்க என்னுடைய அனுபவத்தை போகப்போக தானாக தெரிந்து கொள்வீர்கள்.. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்.. என்னை பொறுத்தவரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள அத்தனை தொண்டர்களுக்கும் முகவரி கொடுத்தது இந்த இயக்கம். இந்த இயக்கத்தில் இருப்பதாகத்தான் எல்லாரையும் நினைத்துக் கொள்கிறேன்.. எனக்கு பயமே கிடையாது.. எனக்கு சுத்தமாக பயமே இல்லை.. எப்போதுமே இந்த இயக்கத்தில் ஒரு சின்ன பிரச்சனை வரும். ஒரு தலைவர் மறைந்த உடனே அந்த பிரச்சனைவரும்.. அந்த பிரச்சனை அப்படியே இருந்தது இல்லை.. திருப்பி சேர்ந்துவிடும்.. அதனால் இது இரண்டாவது நடந்திருக்கு.. முதல்முறை சரி செய்ததும் நான் தான்.. முதல்முறை பண்ணும் போது எனக்கு என்ன வயசு இருக்கும் என்று உங்களுக்கு தெரியும்.. இப்போது பண்ணும் போது என் அனுபவத்தையும் சேர்த்து என்னால் பண்ண முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story