சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!!
Delhi Rain and Flood
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (15. 10.2024) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலி பகுதிக்கு குமரவேல் பாண்டியன், அம்பத்தூர் பகுதிக்கு எஸ். ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மீதமுள்ள பகுதிகளுக்கு மேகநாத ரெட்டி, கண்ணன், ஜானி வர்கீசு, கணேசன், பிரதாப், விசாகன், சிவஞானம், பிரபாகர், செந்தில் ராஜ், மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மற்ற பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க உள்ளனர்.